Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/விலை உயர்ந்த சொகுசு கார்களுக்கு 2 முதல் 7 சதவீதம் பதிவு கட்டணம் உயர்வு: தமிழகம் முழுவதும் இன்று முதல

விலை உயர்ந்த சொகுசு கார்களுக்கு 2 முதல் 7 சதவீதம் பதிவு கட்டணம் உயர்வு: தமிழகம் முழுவதும் இன்று முதல

விலை உயர்ந்த சொகுசு கார்களுக்கு 2 முதல் 7 சதவீதம் பதிவு கட்டணம் உயர்வு: தமிழகம் முழுவதும் இன்று முதல

விலை உயர்ந்த சொகுசு கார்களுக்கு 2 முதல் 7 சதவீதம் பதிவு கட்டணம் உயர்வு: தமிழகம் முழுவதும் இன்று முதல

ADDED : ஜூன் 01, 2010 02:28 AM


Google News

திருநெல்வேலி:தமிழகம் முழுவதும் இன்று(1ம் தேதி) முதல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யும், விலை உயர்ந்த கார்களுக்கான பதிவு கட்டணம் 2 முதல் 7 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது.

இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கிறது.தமிழகத்தில் 70 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட கிளை அலுவலகங்களும் உள்ளன. இந்த அலுவலகங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பைக்குள், நூற்றுக்கணக்கான கார்கள், பஸ்கள், லாரிகள் பதிவு செய்யப்படுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படும் வாகனங்களுக்கு 8 சதவீதம் பதிவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.



இந்த பதிவு கட்டண விகிதத்தில் சிறிது மாற்றம் செய்ய அரசு முடிவெடுத்தது. அனைத்து வாகனங்களுக்கும் கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் சொகுசு கார்களுக்கு மட்டும் பதிவு கட்டண சதவீதத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி ரூ.10 லட்சத்திற்கு உட்பட்ட கார்களுக்கு 8 சதவீதமாக இருந்த பதிவு கட்டணம் 10 சதவீதமாகவும், ரூ.10 லட்சத்திற்கும் மேற்பட்ட விலை உயர்ந்த சொகுசு கார்களுக்கு 15 சதவீத பதிவு கட்டணமும் உயர்த்தப்படுகிறது. இதன் முலம் அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் அதிகரிக்கும்.



2 நாட்களில் 500 வாகனங்கள் பதிவு:தமிழகம் முழுவதும் அனைத்து வாகனங்களுக்கு 2 சதவீதம் பதிவு கட்டணம் கூடுதலாக விதிக்கப்படும் என தகவல் பரவியது. இதன் காரணமாக கார், பைக் ஏஜென்சி நிறுவனத்தினர் தங்களது வாடிக்கையாளர்களை அழைத்து உடனடியாக வாகனங்களை பதிவு செய்யும்படி அறிவுறுத்தினர். நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், வழக்கமான கூட்டத்தை விட வாகனங்களை பதிவு செய்பவர்களின் கூட்டம் அலைமோதியது.கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 500ற்கும் மேற்பட்ட கார்,பைக்குள் புக்கிங் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us